Monday 23 August, 2010

படிக்க உதவி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.....


மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி);  ஆதாரம் : முஸ்லிம்)

25-6-2010 அன்று கிவா வின் நிர்வாக கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானகள் விவாதிக்கப்பட்டன.
அத்துடன் ஊரிலிருந்து கல்வி உதவிக்காக மனுக்கள் வந்திருந்தன.
பேட்டை ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த A . இப்ராகிம், என்பவர்
+2 முடித்துவிட்டு, பாலிடெக்னிக் படிக்க உதவி கேட்டுள்ளார்.
இவரது குடும்பம் போதிய வருமான வசதி இல்லாததால் கிவா விற்கு கடிதம்(மனு) அனுப்பியுள்ளார்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு, அன்று நடந்த கூட்டத்தில் மனுதாரரின் மேல்படிப்பிற்கு ரூபாய் பத்தாயிரம் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இந்த பணத்தை, பேட்டை பள்ளியில், வெள்ளிக்கிழமை ஜும்மாவில் (2-07-2010) அறிவிக்கப்பட்டு, சிபாரிசு செய்த ஜமாஆத் தலைவரின் முன்னிலையில் மனுதாரருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொடுக்கவேண்டிய பணத்தை, அன்று கூட்டத்தில் கலந்து கொண்ட கிவா நிர்வாகிகளிடத்தில் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(கிவா கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்:
1 மக்கட்டி ரபி அகமது, 2. ராசப்பா (நாகூர் மீரான்) , 3. மகபூப் கான், 4. கரீம்,
5. மைதீன் K S, 6 வர்ணமல்லி ஹபீப், 7. அப்துல் ஜலால், 8. ஷாஜகான்.
9 முஹம்மது சித்தீக்.)


மேலும் இதுபோன்ற உதவிப்பணிகள் மேலும் வலுப்பெற உங்களுடைய துஆ உடன் தேவையான உதவிகளையும் தந்து இந்த கிவ அமைப்பின் வளர்ச்சிக்கும், நமது ஊரில் இல்லாதவர்களுக்கு (ஏழைகளுக்கு) உதவுவதன் மூலம் மறுமையில் நிரந்தர நல்ல அமல்களை பெற உங்கள் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நல்லவர்களுடைய கூட்டத்தில் ஆக்கி அருள்வானாகவும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.