Saturday 13 March, 2010

Kiwaவின் பொதுக்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

துபாயில் வெள்ளியன்று (12-3-10) Kiwa (Kadayanallur Islamic welfare Association ) -வின் பொதுக்குழு கூட்டம் கோட்டைப் பள்ளியில் நடைபெற்றது. கடையநல்லூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. அதில், நமதூரில் பெண்களின் தற்போதைய நிலவரம், பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதை செயல்முறைப்படுத்துவது, மேலும் துபாயில் கிவா வில் உறுப்பினர்கள் பலர் இருந்தும் கூட்டத்திற்கு வருவதில் ஆர்வம் காட்டாதது, (சமுதாய அக்கறையின்மை) பற்றியும் பேசப்பட்டது.

தீர்மனகள்:
1 அங்காங்கே பெண்களுக்கு என மார்க்க விழிப்புணர்வை (பெண்கள் பயான்) ஏற்படுத்துவது.
2 வரும் கல்வி ஆண்டில் எழியவர் யாரேனும் கல்விக்காக கிவா வின் உதவியை நடினால் அவர்களின் தேவை அறிந்து உதவுவது.
3 கிவா வில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது. ( இதற்க்கு வேண்டி புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது )
போன்ற தீர்மானங்கள் நிறேவேற்றப்பட்டன.
மேலும் உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் நிர்வாகிகள் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய சகோதரர்கள் சிலர் கிவா வில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கு அதன் அமைப்பாளர் ரபி அஹமது தலைமை தாங்கினர். செயலாளர் மீரான் (ராசப்பா) கிவா-வின் விளக்க உரையும் அவரின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

வஸ்ஸலாம்