Saturday 11 September, 2010

துபாயில் KIWA வின் ஈத் பெருநாளின் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்....

10-9-2010, துபாயில் KIWA வின் ஈத் பெருநாளின் பொதுக்கூட்டம் தேர துபாய் கோட்டைப் பள்ளியில் நடைபெற்றது. அஸ்ரத் முஜீப் ரஹ்மான் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் சமூகப்பணி, மற்றும் ராசப்பா அவர்கள் கல்வி ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் கிவாவின் ஆண்டு அறிக்கை வரவு செலவு கணக்குகளை அமைப்பின் பொருளாளர் மக்கட்டி ரபி தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டின் செயல் திட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்று, உயர் கல்வி படிக்க வசதி இல்லாதவர்களுக்கு, இந்த கிவா அமைப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என செயலாளர் ராசப்பா தெரிவித்தார். இதை அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர்களான ஜனாப் மக்தூம் மற்றும் நைனமுஹமத் அவர்கள் பொறுப்பெடுத்து கொண்டார்கள்.(அல்லாஹு அக்கபர் ).
2010 -2011கிவா அமைப்பு எதிர்நோக்கும் திட்டங்கள் :
1. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டிலும் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்படும்.
2. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட தொடர முடியாத மாணவ, மாணவியர்களை இனம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும்.
3. மார்க்க கல்வி பயில விரும்பும் பெண்களுக்கு இவ்வமைப்பு முழு ஆதரவும். தேவையான உதவிகளையும் வழங்கும்.
4. இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் உயர்கல்வி பெறுவதற்காக கிவா அமைப்பை நாடி வரும் மனுக்களுக்கு குறைந்தது மூன்று பேருக்காவது உதவி செய்ய ஏற்ப்பாடு செய்யப்படும்.
5. மருத்துவ உதவியை நாடி வரும் ஏழைகளுக்கு அவர்களுடைய தேவையறிந்து உதவி செய்து தரப்படும்.
6. நமது சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எளியவர்களுக்கு சிறு தொழில் செய்ய முன்வருவோருக்கு ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு (தையல் மெசின், கிரைண்டர், தள்ளுவண்டி போன்றவைகளுக்காக) இந்த கிவா அமைப்பு பொருள் உதவி வழங்கப்படும்.
7. வட்டி இல்லா கடன் உதவிக்கு இந்த அமைப்பு முயற்சி மேற்கொள்ளப்படும்.
8. மக்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதர்க்காக பொதுக்கூட்டங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட ஏற்ப்பாடு செய்யப்படும்.
இது போன்ற திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். புதிய தலைவராக அசன் கான், துணைத் தலைவராக அப்துல் கரீம் அவர்களையும், தேரா, சோன்பூர்க்கான கிளைச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளர்கள்.
இக்கூட்டத்திற்கு கடையநல்லூர்வாசிகள் பலர் கலந்து கொண்டனர். ரஹ்மான் கான் தலைமைதாங்கினார், வரவேற்புரை திவன்மக்தூம், தலைவர் அசன் கான் நன்றியுரை நிகழ்த்தினார்கள். மேலும் நம் ஊர்வசிகள் உறுப்பினர்களாக தங்களைச் சேர்த்துக்கொண்டு இவ்வமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அல்லாஹுவின் பேரருளால் இக்கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).
எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான். - நபி மொழி
உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)