Monday 1 November, 2010

காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்

காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்


மதுரை : ""மதுரை காமராஜ் பல்கலைகழக கல்லூரிகளில் இலவச பயிற்சி அளிக்கும் வகையில், 11 சமுதாயக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது,'' என, பல்கலை சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், கட்டணமில்லாமல் ஆறுமாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சி, பசுமலை சவுராஷ்டிரா கல்லூரி மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரிகளில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றன. மதுரை பாத்திமா கல்லூரி மற்றும் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரிகளில் மொபைல்போன் பழுதுநீக்கும் பயிற்சி; பசுமலை மன்னர் கல்லூரி மற்றும் விருதுநகர் வன்னியப்பெருமாள் நாடார் கல்லூரிகளில் ஆட்டோமொபைல் மெக்கானிஸம் பயிற்சி; தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் பிரிட்ஜ், "ஏசி' பழுதுநீக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் பிளம்பிங், வயரிங் பயிற்சி, ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் டெய்லரிங் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சி குறித்து அந்தந்த கல்லூரி முதல்வர்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமியை, 0452 - 253 7838ல் தொடர்பு கொள்ளலாம்

(நன்றி S.Mohideen)

“Worries are dark room where negatives are developed “
Please consider the environment before printing this e-mail

No comments:

Post a Comment

welcome