Sunday 2 January, 2011

கிவாவின் செயற்குழு கூட்டம்-2010

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்......

31-12-10, துபாயில் கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பார் அசோசியேசன் (கிவா) வின் 2010-11 ஆம் ஆண்டிற்க்கான செயற்குழு கூட்டம் வெள்ளிக் கிழமை மாலை  நடைபெற்றது. கூட்டத்தில் 2010-ன் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. (இந்த அமைப்பில் 99 பேர் சந்தா உறுப்பினர்களாகவும், 80 பேர் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்). மேலும் அடுத்த 2011 ஆம் ஆண்டின் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
கிவா 2010
1. 2010 கல்வி ஆண்டில் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டார்கள்.
2. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பெறுவதற்காக ஏழை மாணவருக்கு கல்வி உதவித்தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது.
3. 10-10-10 ஞாயிறு அன்று பேட்டை முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் மகளீர் மார்க்க விழிப்புணர்வு பயான் அல்லாஹுவின் பேரருளால் விமர்சையாகவும் மிக சிறப்பாகவும் நடத்தப்பட்டது.
2011-ல் கிவா எதிர்நோக்கும் திட்டங்கள் :
1. நடப்பு கல்வியாண்டில் +2 பயிலும் மாணவர்களுக்கு, குறைந்தது 20 மாணவர்களை கல்வித்தரம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை தேர்வு செய்து, வரும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற அவர்களுக்கு கல்விப் பயிற்சி மையம் (கோச்சிங் சென்டர்) ஏற்ப்படுத்துவது. (தற்போது இந்த கோச்சிங் சென்டர் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது)
2. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெரும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்குவது.
3. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட தொடர முடியாத மாணவ, மாணவியர்களை இனம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பது.
4. இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில், உயர்கல்வி பெறுவதற்காக கிவா அமைப்பை நாடி வருவோருக்கு அவர்களின் தகுதி அடிப்படையில் உதவி செய்யவது.
5. மருத்துவ உதவியை நாடி வரும் ஏழைகளுக்கு அவர்களுடைய தேவையறிந்து உதவுவது. 
6. நமது சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள், சிறு தொழில் செய்ய முன்வருவோருக்கு அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு (தையல் மெசின், கிரைண்டர், தள்ளுவண்டி போன்றவைகளுக்காக) உதவுவது.
7. மக்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதர்க்காக பொதுக்கூட்டங்கள், பெண்கள் பயான் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட ஏற்ப்பாடு செய்வது.
8. மேல்படி செயல் திட்டங்களை நிறைவேற்ற, இந்த கிவா அமைப்பின் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது உறுப்பினர்களிடம் சந்தாவை வசூலிப்பது
போன்றவை விவாதித்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தலைவர் அசன் கான் தலைமைவகித்தார். ராசப்பா(செயலாளர்) , ரபி அகமது(பொருளாளர்) கரீம், மக்தூம், மைதீன், திவான் மக்தூம், மீயாகான், ஷாஜஹான், பாசித், முஜீப் ரஹ்மான், இஸ்மாயில், கபூர்(அபுதாபி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் இஸ்லாமிய சகோதரர்களே!!
நமதூர் சமுதாய நலன் வேண்டி இயங்கி வரும் இந்த KIWA அமைப்பில் உங்கள் எல்லோரையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். வருஷத்திற்கு 100 திர்கம் என சந்தா வசூலிக்கபடுகிறது. எங்களுடைய உதவிப்பணிகள் மேலும் வலுப்பெற, செயல் திட்டங்களை நிறைவேற்ற உங்களுடைய துஆ உடன் உதவிகளையும் தாரளமாக தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இல்லாதவர்களுக்கு (ஏழைகளுக்கு) உதவுவதன் மூலம் மறுமையில் நிரந்தர நல்ல அமல்களை பெற உங்கள் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு
கிவா, தலைவர் மற்றும் செயலாளர்

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது.
அவை, நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நல்லவர்களுடைய கூட்டத்தில் ஆக்கி அருள்வானாகவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment

welcome