Saturday 7 April, 2012

நமதூரில் சமுதாய வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி

மாபெரும் கிருபையால் அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்தவர்களாக...


அஸ்ஸலாமு அலைக்கும்!!!
நமதூரில் சமுதாய வளர்ச்சிக்கு நமது கூட்டு முயற்சியின் பயனை இம்மையிலும் மறுமையிலும் வென்றிட வல்ல இறைவன் நமக்கு துணை நின்று, பேரருள் புரிவானாக!

கண்ணியமிகு கடையநல்லூர் வாழ் சகோதர சகோதரிகளே, பெரியோர்களே தாய்மார்களே!!!! ஒழுக்க சீலர்கள் நிறைந்த நம் கடையநல்லூரில் சமீப காலமாக ஆங்காங்கே நம் இஸ்லாமிய சமுதாயமே வெட்கித் தலைகுனியும் வகையில் நமதூர் முஸ்லிம் பெண்கள் சிலர் (கல்யாணம் ஆன மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்கள்) மாற்று மத மற்றும் பல முஸ்லிம் ஆண்களுடன் ஓடிப்போவது என்பது மிக சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை நாம் கண்டும் காணதது போல் இருந்து விட்டால் பொறுப்புதாரிகளாகிய நாம் மறுமையில் அந்த வல்ல இறைவனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய் விடும் நிலைமைக்கு நாம் ஆளாக நேரிடும்.

இந்த மானக்கேடான சம்பவங்களுக்கு முக்கிய காரணம் நமது இளைஞ்சர்கள்/ இளைஞ்சியர்கள் இடத்தில் இஸ்லாமிய சூழல் இல்லாததுதான். பிள்ளைகளை வளர்க்கும் வீட்டிலும் சரி, அவர்களை வார்த்தெடுக்கும் பள்ளியிலும் சரி. இதை யாராலும் மறுக்க முடியாது. சிலர் சமுதாய நலன் கருதி செயல் படுபவர்களைக் கூட ஏளனமாக பேசியும், இயக்க வாதிகளை, அவன் யோக்கியமா என்று குறை கூறுபவர்களும், நமெக்கென்ன என்று பொறுப்பின்மையும், தவறுகளை மூடி மறைக்கும் சுயநலவாதிகளும், விஞ்சான வளர்ச்சியின் ஆதிக்கம் தான், தற்போது நமதூரில் மேலோங்கி நிற்கிறது. இந்த போக்கு நீடித்தால் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைத்தரம் கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்றைய சூழலில் நமது பலஹீனத்தை பயன்படுத்தி அந்நிய விஷமிகள் நமக்கு ஹராமாக்கப்பட்டதை நாம் அறியாமலேயே (அல்லா மன்னிப்பானாக) உண்ணவும் பருகவும் வைக்கிறாகள், சிலர் நம் இறை நம்பிக்கைக்கு பாதகமாக நம்மவர்களையே திசை திருப்பி விடப்படுறாகிறார்கள்.

முன்பு நமது ஊர் கட்டுப்பாடு, ஒழுக்கம், மானம் மரியாதை, ஆகியவற்றில் சிறந்து விளங்கியது என்பதில் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அனால் இன்றோ, மாற்று மத சகோதரர்கள் கூட ஏளனமாகவும், கேவலமாகவும் பார்க்கும் நிலையில் நமது ஊரில் முஸ்லீம் சமுதாயம் சீர்கெட்டு இருக்கிறது. நமதூர் ஜமாஅத், வட்டாரத்துக்கு கீழ்படிதல் இதுவெல்லாம் இப்போ எங்கே போயிற்று? தெருவில் பலாச்சோறுக்கு பைசா கொடுக்கவில்லை என்றால் வட்டாரத்திலிருந்து நீக்கிவிடுகிறார்கள். இதுதான் நாம் கற்றுக்கொண்டதா? இதுதான் நமது கட்டுகோப்பா? ஒழுக்கத்தையே வாழ்க்கை நெறியாக போதிக்கும் இஸ்லாத்திற்கே இழுக்கல்லவா? முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக வாழும் நமதூரில் நமக்கு பாதுகாப்பில்லை, நம்மிடையே ஒற்றுமையில்லை. எந்த முயற்சி எடுத்தாலும் கட்சி, முஹல்ல அமைப்புகள் என்று பல பிரிவுகளாக சிதறுண்டு கிடக்கிறோம். நமது பொறுப்பில்லாத போக்கு எங்கு சென்று முடியும்? இந்த நிலை தொடராமல் இறுக்க, இதை சரி செய்யும் விதமாக ஜமாஅத்தார்கள் என்ற முறையில் நாம் என்ன முயற்சி எடுத்தோம், என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

நம் முன்னோர்கள் சமுதாய நல ஒற்றுமைக்கும், முஸ்லீம்களின் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டுள்ளர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். நமது ஊருக்கு பள்ளிக் கூடங்கள் மட்டும் இருந்தால் போதுமா? ஜமாஅத் தலைவர்கள் நீங்ககள் நினைத்தால் நமதூரில் பல கல்லூரிகளை நிறுவலாம். வீணாக கோர்ட்டுக்கும், கேசுக்கும் செலவு செய்வதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான கரியங்களுகளில் கவனம் செலுத்துங்கள். பள்ளிகளை நவீனப்படுத்துங்கள், ஆரம்ப பள்ளியில் மார்க்கக் கல்வியை கட்டயப்படுத்துங்கள். வட்டாரத்தில் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவுங்கள். சொந்த பந்தங்களாக பழகிக் கொண்டிருக்கும் நமதூர் சமுதாய மக்களின் நலனுக்காக இந்த ஜமாஅத் முன்வந்து என்ன செய்யப் போகிறது என்பதை ஆவலுடன் எதிபர்க்கிறோம். வருங்கால சந்ததியினர் நம்மை பழித்துப் பேசி விமர்சனத்துக்கு ஆளாவதை தவிர்ப்போம்.

எனவே எல்லா தரப்பு ஜமாத்துகளும் ஓன்று கூடுங்கள், வெளிநாடுகளில் வாழ் கடையநல்லூர் வாசிகள் நாங்களும் உங்களுக்கு உதவியாக இருப்போம், நம் வருங்கால இளைய சந்ததியினரின் ஒழுக்கதிற்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் நாம் ஒன்றுபட்டு பாடுபடுவோம்.

நல்ல பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமை, நல்ல மாணவர்களை உறுவாக்குவது ஆசிரியர்களின் கடமை, நல்ல சமுதாயத்தை உறுவாக்குவது அதன் (தலைவர்) பொருப்பாளர்களின் கடமை.

நமது பொறுப்புகளைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

ஒழுக்க சீர்கேடுகளை மனதில் கொண்டு பலமுறை பல இடங்களில் கடையநல்லூர் அமீரக வாழ் கடையநல்லூர் நண்பர்கள் ஓன்று கூடி கலந்து ஆலோசிக்கப்பட்ட தொகுப்பை, நமது ஊர் ஜமாஅத்துக்கு பதிவு செய்கிறோம்.

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும், நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டிக்கும் தீர்மானம் கொண்டுவர வேண்டும். எந்த ஒரு தடங்கல்களையும் எதிர்கொண்டு நாம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப் படுத்த நமதூரில் முஸ்லீம் சமுதாயம் ஒன்றுபட்டால் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது. நாம் கொள்கையில் வேறுபட்டு ஒருவரை ஒருவர் குறை கூறாமல் நாம் ஓரணியில் திரள வேண்டும்.

கடையநல்லூரின் ஜமாஅத், ஒருங்கிணைந்த குடும்பங்களின் தலைவர்கள், அனைவரும் சேர்ந்து மனு எழுதி போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அதாவது இது சம்பந்தமாக யார் வந்து போலீசில் புகார் செய்தாலும் முதலில் போலீஸ் இந்த தலைவர்களின் அனுமதியின்றி புகாரை வாங்ககூடாது. நடவடிக்கையும் எடுக்ககூடாது. இது சம்பந்தமாக நமது ஊர் முஸ்லிம் வக்கீல்களிடம் தலைவர்கள் பேசி முடிவு எடுக்க வேண்டும்

இந்த ஒருங்கிணைந்த குடும்பங்களின் தலைவர்கள் குடும்ப முக்கியஸ்தர்களிடம் இத்தகவலை தெரிவிக்க வேண்டும். அதாவது ஏதாவது ஒரு பெண் ஒழுக்கக் கேடான காரியத்தில் ஈடுபட்டால் உடனே முந்தய கால கட்டங்களில் செய்தது போல் ஊர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து சம்பந்தப்பட்டவர்களை கூட்டத்திற்கு வரவழைத்து தண்டனைகள் (முன்பு கொடுத்தது போல்) கொடுக்கப்படவேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக நவீன ரக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது

3. மொபைல் போனில் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ வசதி செய்து கொடுப்பது.

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது.. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகையவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

1. நம் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியை கட்டயப்படுத்துங்கள்.

2. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்

3. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்

4. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்

5. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது

6. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு நவீன ரக மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது

7. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்

8. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே

9. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே

10. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

11 .பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்

12. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன

13. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொது, அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனெ பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

14. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

15.பெண்களுக்காக நடத்தப்படும் மார்க்க விழிப்புணர்வு கூட்டங்களுக்கு தவறாது கலந்து கொள்வதற்கு அனுமதியுங்கள். அதில் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம், மார்கத்தை அறிந்து கொள்ள இதுவே அவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம். பெண்கள் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்வதை நாமே தடையாக இருக்கா வேண்டாம்.

16. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். பர்தா என்பது அழகை மறைப்பதற்கு, முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள்,

17. வட்டிக்கு வாங்குவது, சீட்டு சேர்வது போன்வற்றை தவிருங்கள். இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி.

18. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சிறு தொழில் செய்ய ஆர்வமூட்ட வேண்டும்.

19. தொழில் செய்ய முனைவோருக்கு கடன் உதவி செய்யது நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகை செய்யது கொடுக்க வேண்டும்.

சிந்திப்பீர் செயல்படுவீர்!! வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர். சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!! முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!!

சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!! இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்....

அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு:

அமீரகத்தில் வாழ் கடையநல்லூர் சகோதரர்கள், நமதூர் சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி சமூக சீர்கேடு மற்றும் நமதூர் பொது நலனுக்காக கடையநல்லூர் முஸ்லீம் சமுகநல கூட்டமைப்பு KADAYANALLUR ISLAMIC WELFARE ASSOCIATION (KIWA) துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. கடையநல்லூரில் பல அமைப்புகள் இயங்கி வந்தாலும், வெளிநாட்டில், இது ஒரு இயக்க, அமைப்பு, கட்சி வேறுபாடு இன்றி முஸ்லிம் சகோதரர்களின் கூட்டு குழுவாகும்.

அமீரக வாழ் கடையநல்லூர் வாசிகள் அனைவர்களும் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து நமது ஊரின் வளர்சிக்ககவும் நமது சமுதாய மக்களின் நலனுக்காகவும் நாம் ஊரோடு ஓன்று சேர்ந்து பாடுபட அன்புடன் அழைகின்றோம்.

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நல்லவர்களுடைய கூட்டத்தில் ஆக்கி அருள்வானாகவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ரபி மக்கட்டி (KIWA)



No comments:

Post a Comment

welcome