Friday 19 November, 2010

கிவா வின் இஸ்லாமிய மார்க்கப் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்............................
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

துபாயில் 16-11-10 அன்று மாலை தியாகத்திருநாளை முன்னிட்டு தேரா கோட்டைப் பள்ளியில் கிவா வின் இஸ்லாமிய மார்க்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடையநல்லூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். தியாகத்தின் சிறப்புகளைப் பற்றி சகோதரர் முஜீப் ரஹ்மான் மற்றும் சகோதரர் முகமத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். செயலாளர் ராசப்பா, கிவா அமைப்பின் வளர்ச்சிப் பணிகளை விவரித்தார். தலைவர் அசன் கான், அமைப்பின் திட்டங்களை விளக்கி, கடையநல்லூர் சகோதரர்கள் எல்லோரும் இந்த அமைப்பில் இணைந்து நமதூர் சமுதாய நலனுக்காக ஒன்றுபட்டு பாடுபட கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது.
1) மதினாநகர் பள்ளி விரிவாக்க கட்டிடப்பணி மற்றும் பெண்கள் பள்ளி கட்டுவதற்காக நிதி கேட்டு கடிதம் வந்துள்ளது. எனவே இந்த பள்ளிப் பணிக்காக உதவி செய்ய விரும்புபவர்கள் சகோதரர் ரஹ்மானை தொடர்பு கொள்ளவும் (0507341448)
2) கடந்த வருடம் இதே காலகட்டத்தில் நமதூரில், அறியப்படாத மர்ம நோய் தாக்கப்பட்டு பல உயிர்கள் பலியாயின. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரி நமதூர் ஜமாஆத் தலைவர்கள் மற்றும் முனிசிபாலிட்டி நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு திவான் மக்தூம் வரவேற்ப்புரை வழங்கினார்.  கூட்டத்தில் மக்தூம், கரீம், மக்கட்டி ரபி, மைதீன், மீயகான், ரஹ்மான், ஜபார், ஷாஜஹான், அலி  மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தலைவர் அசன் கானின் நன்றியுரையுடன் அல்லாஹுவின் பேரருளால் இக்கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).

எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான். - நபி மொழி

உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)

No comments:

Post a Comment

welcome